முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » சுனாமி எச்சரிக்கை.. நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி.. 200ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. புகைப்படங்கள்!

சுனாமி எச்சரிக்கை.. நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி.. 200ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. புகைப்படங்கள்!

Turkey earthquake | துருக்கியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 1000க்கும் மேற்பட்ட உயிரிழக்கலாம் என அஞ்சப்படுகிறது.

  • 15

    சுனாமி எச்சரிக்கை.. நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி.. 200ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. புகைப்படங்கள்!

    துருக்கியை மையமாகக் கொண்டு இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமானது

    MORE
    GALLERIES

  • 25

    சுனாமி எச்சரிக்கை.. நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி.. 200ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. புகைப்படங்கள்!

    இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது தென்கிழக்கு துருக்கியை மட்டுமல்லாது அண்டை நாடான சிரியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.லெபனான், இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ஐரோப்பிய நாடான இத்தாலியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    சுனாமி எச்சரிக்கை.. நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி.. 200ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. புகைப்படங்கள்!

    இதுவரை வெளியான தகவல்களின் படி இந்த கோர நிலநடுக்கம் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பல கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகாரிக்கும் என அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 45

    சுனாமி எச்சரிக்கை.. நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி.. 200ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. புகைப்படங்கள்!

    20 ஆண்டுகளுக்குப் பின் மிக மோசமான நிலநடுக்கத்தை துருக்கி தற்போது கண்டுள்ளது. இதற்கு முன்னர் 1999இல் துருக்கியில் ரிக்டர் 7.4 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 17,000 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் நடைபெறும் மோசமான நிலநடுக்கமாகும்.

    MORE
    GALLERIES

  • 55

    சுனாமி எச்சரிக்கை.. நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி.. 200ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. புகைப்படங்கள்!

    மீட்பு பணிகள் நிறைவடைய கிட்டத்தட்ட பல மணிநேரம் பிடிக்கும் என்பதால் உயிர்சேதம் மற்றும் பொருள்சேதத்தின் முழுவிவரம் இன்று மாலை தான் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் பாதிப்பை சந்தித்துள்ள தங்களுக்கு உதவ வேண்டும் என உலக நாடுகளிடம் துருக்கி கோரிக்கை வைத்துள்ளது.

    MORE
    GALLERIES