கூகுள் மற்றும் ஆல்பபெட் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் மனைவிதான் அஞ்சலி பிச்சை. அஞ்சலி இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். கரக்பூரில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐடி)-யில் வேதியியல் பொறியியலில் பட்டம் பெற்றவர். இருவரும் ஐஐடியில் இளங்கலை பொறியியல் மாணவர்களாக இருந்தபோது அஞ்சலி மீது காதலில் விழுந்துள்ளார் சுந்தர் பிச்சை. அப்போது ஒருவருக்கு வருவர் வகுப்புகள் எடுத்துக்கொள்வதும் உண்டு.
அஞ்சலியுடன் நீண்டகால நட்பில் இருந்த சுந்தர் பிச்சை, பின்னர் ஒரு நாள் தனது காதலை வெளிப்படுத்த, நீண்ட நாள் நட்பு காதலாக மலர்ந்தது. பின்னர், பல்கலைக்கழக இறுதியாண்டு பயிலும் போது அஞ்சலிக்கும் சுந்தர் பிச்சைக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சம் செய்யப்பட்ட கையோடு சுந்தர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக அமெரிக்கா பறந்தார். பல நாட்களாக நீண்ட தூர உறவில் இருந்த இந்த ஜோடிக்கு பின்னர் திருமணம் நடைபெற்றது.
அஞ்சலி - சுந்தர் தம்பதிக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகளின் பெயர் காவ்யா மற்றும் மகனின் பெயர் கிரண். ஐஐடியில் படிக்கும்போது சுந்தர் பிச்சை ஒரு சாதாரண மாணவராக தனது பிடிப்பை தொடர்ந்தார். அப்போது டிவி அல்லது கார்கள் இல்லாத ஒரு சிறிய வீட்டில் வசித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அவரைப் பற்றி எல்லாம் அறிந்த பின்னரும் அஞ்சலி சுந்தரின் காதலை ஏற்றுக்கொண்டார். அன்று பற்றிய கைகள் இன்று உலகின் முன்னணி பணக்காரர்களுள் ஒருவராக ஆன பின்னரும் பற்றியே இருக்கின்றன. எந்த எதிர்ப்பார்ப்புகளுமின்றி ஏற்படும் உறவு ஒருநாள் நிச்சயம் உயரத்தை அடையும் என்பதற்கு அஞ்சலி மற்றும் சுந்தர் பிச்சை ஒரு வாழும் உதாரணம் எனலாம்.