வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கி விடப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏழு மாகாணங்களில் இருந்து 3 ஆயிரம் படை வீரர்கள், 1800 மீட்புப்படையினர் ஹெனான் மாகாணத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.வெள்ள பாதிப்பால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் மாயமாகியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய் வரை ஸெங்ஸோவில் 617.1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அப்பகுதியில் ஆண்டு தோறும் பெய்யும் மழையின் மொத்த அளவு 640 மில்லி மீட்டர். வருடாந்தர மழை, மூன்றே நாட்களில் பெய்ததால் மஞ்சள் நதி மற்றும் ஹைஹே நதிகளில் அபாய அளவில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. யிஹெடான் அணை எந்நேரமும் உடையலாம் என ராணுவம் எச்சரித்துள்ளதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.