ஜி20 மாநாடு 2021: ரோமில் உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி (படங்கள்)
இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்த பிரதமர் நரேந்திர வாழ்த்து தெரிவித்தார். (படம்: நியூஸ்18)
2/ 14
அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி. (படம்: நியூஸ்18)
3/ 14
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி.. (படம்: நியூஸ்18)
4/ 14
ஜி20 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். (படம்: நியூஸ்18)
5/ 14
ரோம் உச்சி மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பிற நாடுகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். (படம்: நியூஸ்18)
6/ 14
ஜி20 என்பது உலகின் முக்கிய பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் ஒரு முன்னணி உலகளாவிய மன்றமாகும். அதன் உறுப்பினர்கள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர்.(படம்: நியூஸ்18)
7/ 14
ஜி20 மாநாட்டில் ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி. (படம்: நியூஸ்18)
8/ 14
பிரதமர் நரேந்திர மோடியுடன் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானாம் (படம்: நியூஸ்18)
9/ 14
இந்த உச்சிமாநாட்டில், தொற்றுநோயிலிருந்து மீள்வது மற்றும் உலகளாவிய சுகாதார நிர்வாகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தும் கருப்பொருளை மையமாகக் கொண்டது. (படம்: நியூஸ்18)
10/ 14
முன்னதாக, ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி உட்பட அனைத்து உலகத் தலைவர்களும் புகைப்படம் எடுக்க குழுவாக ஒன்று கூடினர். (படம்: நியூஸ்18)
11/ 14
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். (படம்: நியூஸ்18)
12/ 14
ரோமில் இருந்து, பிரதமர் மோடி நாளை கிளாஸ்கோவுக்குச் செல்கிறார், அங்கு 26வது கட்சிகளின் (COP-26) உலகத் தலைவர்கள் பங்கேற்கும், ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு மாநாட்டிற்கு (UNFCCC) செல்கிறார். (படம்: நியூஸ்18)
13/ 14
ஜி20 மாநாட்டில் ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி. (படம்: நியூஸ்18)
14/ 14
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி. (படம்: நியூஸ்18)