ஹோம் » போடோகல்லெரி » உலகம் » ஜப்பான் நாகசாகி மீது அணுகுண்டு முதல் ககோரி ரயில் கொள்ளை வரை: வரலாற்றில் இன்று - போட்டோஸ்
ஜப்பான் நாகசாகி மீது அணுகுண்டு முதல் ககோரி ரயில் கொள்ளை வரை: வரலாற்றில் இன்று - போட்டோஸ்
வரலாற்றில் ஒவ்வொரு தினமும் பல நிகழ்வுகள் கொண்ட தினமாக அமையும், இதில் மிகவும் துயரார்ந்த கணம் முதல் அதிமகிழ்ச்சி கணங்கள் வரை கலந்திருக்கும், இன்று ஆகஸ்ட் 9ம் தேதி உலக வரலாற்றில் நடந்த நிகழ்வுகளின் படங்கள் இதோ:
ஆகஸ்ட் 9 நாகசாகி மீது அமெரிக்கா குண்டு வீசித் தாக்கி அழித்த நாள்
2/ 9
இதுதான் நாகசாகி மீது வீசப்பட்ட ‘ஃபேட் மேன்’ என்ற பயங்கர அணுகுண்டு
3/ 9
ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானில் மட்டுமல்ல ஏகாதிபத்தியத்தின் எதிரான மானுட அழிவிக்கு எதிராக இந்த நாள் நினைவுகூரப்படுகிறது.
4/ 9
1945- அமெரிக்கா ஜப்பான் மீது 2வது அணுகுண்டை வீசியது, இம்முறை நாகசாகியின் மீது அணுகுண்டு வீசியது. நகரமே சாம்பலாக 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கருகி பலியாகினர்.
5/ 9
1925: லக்னோ அருகே ககோரியில் ரயில் கொள்ளை நடந்தது. ஹிந்துஸ்தான் குடியரசு கூட்டமைப்பு என்ற அமைப்பு இந்தக் கொள்ளையை நடத்தியது. ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் அஷ்ஃபக்குல்லா கான் ஆகிய இருவர் இந்த ரயில் கொள்ளையை வழிநடத்தினர்.
6/ 9
1974: ஜெரால்ட் ஃபோர்ட் அமெரிக்காவின் 38வது அதிபராக பொறுப்பேற்றார், நிக்சன் பதவி விலகிய பிறகு இவர் அமெரிக்க ஜனாதிபதியானார்.
7/ 9
2000: வெனிசூலா கம்யூனிஸ்ட் அதிபர் சாவேஸ் இன்றைய தினம் 2000-ம் ஆண்டில் ஈராக் வந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் 1990க்குப்பிறகு ஈராக் வருவது சாவேஸ் மூலம்தான்.
8/ 9
2012: கென்யாவின் டேவிட் லெகுடா ருடிஷா ஆடவர் 800 மீ ஓட்டப்பந்தயத்தில் புதிய உலக சாதனை படைத்தார்.
9/ 9
2014: அமெரிக்காவில் கருப்பரின இளம் நபர் மைக்கேல் பிரவுன் சுட்டுக் கொல்லப்பட்டதை எதிர்த்து மிசௌரியில் கடும் போராட்டம் நடந்தது