காங்கோவின் கிழக்கு பகுதியில் திடீரென்று கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு கிராமங்களை நீர் சூழ்ந்தன.
2/ 5
குறிப்பாக நயாமுகுபி என்ற கிராமத்தில் சுமார் 100 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டன. இதில், ஏராளமானோரை காணவில்லை என்றும் கூறப்பட்டது.
3/ 5
தற்போது மழை குறைந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கியும் ஆங்காங்கே ஒதுங்கிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
4/ 5
இதுவரை சுமார் 203 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. எஞ்சியவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
5/ 5
இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒரு நாள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.