ஹோம் » போடோகல்லெரி » உலகம் » இன்று சூரிய கிரகணம்... இந்தியாவில் தெரியுமா?

இன்று சூரிய கிரகணம்... இந்தியாவில் தெரியுமா?

 • 16

  இன்று சூரிய கிரகணம்... இந்தியாவில் தெரியுமா?

  ஏப்ரல் மாதத்தின் கடைசி நாளான இன்று  இந்த ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் நடைபெற இருக்கிறது. பகுதியளவு தென்பட உள்ள இந்த கிரகணமானது 4 மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற நாடுகளில் சனிக்கிழமை ஐஎஸ்டி நேர நிலவரப்படி நண்பகல் 12.15 மணி முதல் பிற்பகல் 2.11 மணி வரையிலும் கிரகணம் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 26

  இன்று சூரிய கிரகணம்... இந்தியாவில் தெரியுமா?

  நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையமும் இந்தத் தகவல்களை உறுதி செய்துள்ளது. சிலி, அர்ஜெண்டினா, உருகுவே, மேற்கு பாராகுவே, தென்மேற்கு பொலிவியா, தென்கிழக்கு பெரு மற்றும் தென்மேற்கு பிரேசிலில் சிறு பகுதி ஆகிய இடங்களில் சூரிய கிரகணம் தென்படும் என்று நாசா கூறியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 36

  இன்று சூரிய கிரகணம்... இந்தியாவில் தெரியுமா?

  இது மட்டுமல்லாமல் அண்டார்டிக்காவில் ஒரு சில பகுதிகளிலும், பாஃல்க்லாந்து தீவுகள் உள்ளிட்ட தென் அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்கரை பகுதிகளிலும், தெற்கு பசிஃபிக் மற்றும் தெற்கு கடல் ஆகிய பகுதிகளிலும் கிரகணம் தென்படும் என்று கூறப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 46

  இன்று சூரிய கிரகணம்... இந்தியாவில் தெரியுமா?

  சூரிய கிரகணம் என்றால் என்ன? பூமி மற்றும் சூரியனுக்கு இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் கடந்து செல்வதைத் தான் சூரிய கிரகணம் எனக் குறிப்பிடுகின்றனர். இன்று நடைபெற உள்ள சூரிய கிரகணமானது பகுதியளவு மட்டுமே என்ற சூழலில், பூமியில் இருந்து தெரியும் சூரியனின் ஒரு பகுதியை மட்டும் நிலவு மறைக்கும் என்று கருதப்படுகிறது. இந்த கிரகணத்தின்போது சூரியனின் 65 சதவீத பகுதியை நிலவு மறைக்கும் என்று நாசா தெரிவிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 56

  இன்று சூரிய கிரகணம்... இந்தியாவில் தெரியுமா?

  நாம் எப்படி பார்ப்பது? சூரிய கிரகண நிகழ்வு இந்தியாவில் தெரியாது என்றாலும் கூட, இயற்கையின் அதிசயங்கள் குறித்து அதீத ஆர்வம் கொண்டுள்ள மக்கள் அதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. Timeanddate.com என்ற இணையதளம் சூரிய கிரகண நிகழ்வை நேரலையில் ஒளிபரப்பு செய்ய உள்ளது. தற்போதைய தொழில்நுட்பத்தில் சூரிய கிரகணத்தை மிக நெருக்கமான அளவில் பார்க்கும் வசதிகள் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 66

  இன்று சூரிய கிரகணம்... இந்தியாவில் தெரியுமா?

  அடுத்த கட்டமாக அக்டோபர் 25ஆம் தேதியன்று பகுதியளவு சூரிய கிரகணமும், நவம்பர் 8ஆம் தேதியன்று முழுமையான சூரிய கிரகணமும் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 25ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணத்தை இந்திய மக்கள், மாலையில் சூரியன் மறையும் போது சற்று நேரத்திற்கு பார்க்கலாம்.

  MORE
  GALLERIES