அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் ஷானா ஸ்டமே என்பவர் வைட் ஷெப்பர்ட் இன நாய்களை வளர்த்து வருகின்றனர். இவை கடந்த வெள்ளிக்கிழமை 8 குட்டிகளை ஈன்றுள்ளது. வழக்கமான நாய்களின் நிறத்தை விட எலுமிச்சை நிறத்தில் பிறந்த ஹல்க்கை பலரும் பார்வையிட்டு புகைப்படம் எடுத்து வருகின்றனர். இதன் நிறம் வித்யாசமானாலும் மற்ற நாய்களைப் போல் உடல் ஆரோக்கியமாக ஹல்க் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.