உக்ரைன் பயணிகள் விமானத்தை ஈரான் படைகள் தவறுதலாக சுட்டு வீழ்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2/ 6
சில தினங்களுக்கு முன் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார்.
3/ 6
இதற்கு பதிலடியாக இன்று அதிகாலை ஈரான் நாட்டு படைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.
4/ 6
இதனிடையே உக்ரைன் நாட்டு விமானம் ஈரான் தலைநகர் தெஹ்ரான் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது.
5/ 6
இந்நிலையில், அந்த விமானம் ஈரான் நாட்டு படைகளே தவறுதலாக சுட்டுவீழ்த்தியிருக்கலாம் என அந்நாட்டு ஊடகம் ஒன்று கூறுகிறது. இது தொடர்பாக உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
6/ 6
ஈரான் - அமெரிக்கா இடையிலான சண்டை, போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது