ரியல் எஸ்டேட் தொழிலில் சக்கரவர்த்தியாக விளங்கிய டொனால்ட் ட்ரம்ப், ஒவ்வொரு ஆண்டும் வெளியாகி வரும் ஃபோர்ப்ஸ் அமெரிக்காவின் டாப் 400 கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம் பிடித்து வந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பட்டியலில் இடம் கிடைக்காமல் கடந்த 25 ஆண்டுகளில் முதல் முறையாக பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
டொனால்ட் ட்ரம்பின் சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர்களாகும், ஆனால் அவரின் சொத்து மட்திப்பில் 400 மில்லியன் டாலர்கள் குறைவாக இருப்பதால் இந்த முறை ஃபோர்ப்ஸ் அமெரிக்காவின் கோடீஸ்வரர்களின் பட்டியலில் டொனால்ட் ட்ரம்பால் இடம்பிடிக்க இயலாமல் போயுள்ளது. கடந்த ஆண்டும் டொனால்ட் ட்ரம்பிடம் இதே அளவுக்கு தான் சொத்து மதிப்பு இருந்தது என்றாலும், அவர் 339வது இடத்தில் இருந்தார்.
1997 முதல் 2016ம் ஆண்டு வரை ஃபோர்ப்ஸ் 400 முதல் அமெரிக்க கோடீஸ்வரர்களின் பட்டியலில் 200வது இடத்துக்குள் டொனால்ட் ட்ரம்ப் வந்துவிடுவார். ஆனால் அவர் அமெரிக்க அதிபராக 2016ம் ஆண்டு வந்ததற்கு பின்னர், ஃபோர்ப்ஸ் பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் டொனால்ட் ட்ரம்ப் சரிவை சந்தித்து வந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது பட்டியலில் இருந்தே வெளியேற்றப்பட்டிருக்கிறார்.