உலகின் மிக பசுமையான நகரங்களில் ஒன்றாக கருதப்படும் சிங்கப்பூர் அதன் காரணமாகவே "கார்டன் சிட்டி" என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. ஆனால், ஆச்சரியமூட்டும் விதமாக 2021 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் 6.94 மில்லியன் டன்கள் திடக்கழிவுகள் உருவாக்கப்பட்டு, அதில் வெறும் 3.83 மில்லியன் டன்கள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. இந்த கழிவுகள் அனைத்தும் சிங்கப்பூரில் இருக்கும் ஒரே ஒரு குப்பை மேடான புலாவ் செமாக்கவ் என்ற இடத்தில் குவிக்கப்படுகிறது. இதில் வருத்தம் அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், அந்த இடம் 2035 ஆம் ஆண்டில் முழுமையாக நிரப்பப்பட்டுவிடும். இந்த இடத்தை தக்கவைத்து கொள்ள கழிவுகள் உருவாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
உலக அளவில், சிங்கப்பூர் 0.11% கார்பன் வெளியேற்றத்திற்கு காரணமாகிறது. மேலும் நுகர்வை குறைப்பதன் மூலமாக கார்பன் வெளியேற்றத்தை குறைக்க சிங்கப்பூரில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உண்மையில், சிங்கப்பூரின் 189,000 டன்கள் கழிவுகள் ஜவுளித்துறையில் இருந்து தான் வருகிறது. புதிய உடைகளை வாங்கி அணியும் பொருட்டு பலர் தங்களது பழைய ஆடைகளை குப்பை மேட்டில் தூக்கி எறிந்து விடுகிறார்கள்.
ஆகவே ஒருவர் என்ன பயன்படுத்துகிறார் என்பதில் இருப்பதன் மூலமாகவும், உடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தூக்கி எறியும் முன் அதனை மறுசுழற்சியோ அல்லது மறுபயன்பாட்டிற்கோ ஈடுபடுத்த முடியுமா என்பதை யோசித்து செயல்படுவதன் மூலமாக திடக்கழிவுகளை குறைக்கலாம். மேலும் இதனால் பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டை குறைத்து, காலநிலை மாற்றத்தில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும்.
கண்களால் காணக்கூடிய அல்லது உணரக்கூடிய இந்த கழிவுகளைக் காட்டிலும், ரேடாரைத் தாண்டி செல்லும் மற்றொரு கழிவு ஒன்று உள்ளது. அது தான் டிஜிட்டல் கழிவு. இதில் எலக்ட்ரானிக் கழிவுகள் மற்றும் ஆன்லைன் செயல்பாடுகளால் உண்டாகும் கழிவுகள் ஆகிய இரண்டும் அடங்கும்.2020 ஆம் ஆண்டில், 4.1 பில்லியன் நபர்கள் இன்டர்நெட் பயன்படுத்தியதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. இதன் அடிப்படையில் நாம் பயன்படுத்தும் கேட்ஜெட்டுகள், இன்டர்நெட் மற்றும் அவற்றை ஆதரிக்கும் அமைப்புகள் அனைத்தின் கார்பன் சுவடுகள் உலக பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 4% பங்கு வகிக்கிறது.
நாம் ஆன்லைன் செயல்பாடுகளைச் செய்ய பயன்படுத்தும் சாதனங்களை இயக்குவதற்கு தேவையான ஆற்றல் மற்றும் நாம் பயன்படுத்தும் வயர்லெஸ் நெட்வொர்க்குகளுக்கு தேவையான பவர் போன்றவை கார்பனை வெளியிடுகிறது. உதாரணமாக, மின்னஞ்சல் 0.3 கிராம் முதல் 50 கிராம் வரையிலான கார்பன்டை ஆக்சைடை வெளியிடுகிறது. இது நீங்கள் இணைப்புகளை அட்டாச் செய்துள்ளீர்களா என்பது பொறுத்து அமையும்.
மின்னஞ்சல் பயன்படுத்தும் ஒரு தொழிலதிபர் மட்டுமே ஒரு வருடத்திற்கு 135 கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றத்திற்கு காரணமாகிறார். இது 321 கிலோமீட்டர் கார் ஓட்டியதற்கு சமம்.ஒரு சராசரி இன்டர்நெட் பயனாளர் ஒவ்வொரு வருடமும் பெறும் தேவையற்ற மின்னஞ்சல் காரணமாக மட்டுமே 28.5 கிலோ கார்பன்டை ஆக்சைடு வெளியாகிறது. சிங்கப்பூரில் அன்றாட செய்திகளைப் படிக்க மின்னஞ்சல் என்பது ஒரு வளர்ந்து வரும் ஒரு பிளாட்பார்ம் ஆகும்.
எனினும், தேவையற்ற மின்னஞ்சல்களை பெறும் பட்சத்தில் அவற்றை அன்சப்ஸ்கிரைப் செய்வது டிஜிட்டல் கழிவுகளைக் குறைக்க உதவும். கோவிட் வந்த பிறகு வீடியோ கால் செய்வது அதிகரித்து வருகிறது. வெவ்வேறு நாடுகளில் உள்ள நபர்களை உள்ளடக்கிய ஐந்து மணிநேர வீடியோ கான்ஃபரன்சிங் மீட்டிங் 4 கிலோ முதல் 215 கிலோ வரையிலான கார்பன்டை ஆக்சைடை வெளியிடும்.
இந்த வீடியோ கான்ஃபரன்சிங் மீட்டிங்கிற்கு பதிலாக மின்னஞ்சல் அனுப்ப வாய்ப்பு உள்ளதா? இதற்கான பதில் ஆம் என்றால், அவ்வாறு செய்வது உங்கள் நேரத்தையும், கார்பன் வெளியீட்டையும் குறைக்க வல்லது. வீடுகள் மற்றும் டிஜிட்டல் கழிவுகளைக் குறைக்க இன்னும் ஏராளமான விஷயங்களை உங்களால் செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.