ஏமனில் உள்ள நரகத்தின் கிணறு என்றழைக்கப்படும் இயற்கையான கிணறு விலகாத மர்மங்களை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.
2/ 5
ஏமன் - ஓமன் எல்லையில் மஹ்ரா பாலைவனப்பகுதியில் இந்த மர்ம கிணறு அமைந்துள்ளது. 90 அடி அகலம் கொண்ட இந்த கிணறு 300 முதல் 750 அடி ஆழம் கொண்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
3/ 5
இதன் அருகில் செல்லும் பொருட்கள் உள்ளே இழுத்துக் கொள்ளப்படும் என்றும், இது பேய்களை அடைத்து வைக்கும் சிறை என்றும் உள்ளூர் கதைகள் சொல்லப்படுகின்றன.
4/ 5
ஆனால் அதனுள் என்ன இருக்கிறது என்பது தங்களுக்குத் தெரியாது என ஏமன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
5/ 5
சூரிய ஒளி கூட கிணற்றின் சில அடிகள் வரை மட்டுமே தொடுகிறது என்பதால் இருளாகவே தோன்றும் இந்த கிணற்றுக்குள் என்ன இருக்கிறது என்பது மர்மமாகவே உள்ளது.