மரங்களுக்கிடையே மறைந்திருக்கும் அற்புதமான பிரைவேட் எஸ்டேட்டில் ஆடம்பரமான மாளிகையாக அனைத்து வசதிகளோடும் கட்டப்பட்டிருக்கிறது இந்த கோட்டைகள். இந்த கோட்டைகள் கட்டப்பட்டிருக்கும் பிரைவேட் ஈஸ்டட்டை 1982 ஆம் ஆண்டு வாங்கியதாக, இவற்றின் உரிமையாளர் ஜான் லாவெண்டர் கூறியுள்ளார். கோட்டை கட்டவேண்டும் என்ற உத்வேகம் எப்படி ஏற்பட்டது பற்றி செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார் லாவெண்டர்.
தனக்கு விவாகரத்து ஆன போது, நியூயார்க் நகரத்தில் 5 நபர்களுடன் ஒரு வீட்டைப் பகிர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார். மூன்று வயது மகன் இருக்கும் ஒருவர் அத்தகைய சூழ்நிலையில் குழந்தையை வளர்ப்பது சரியாக இருக்காது. எனவே, தன்னுடைய குழந்தையை தனியாக அழைத்து இது நம்முடைய வீடு இல்லை. நாம் இங்கு தற்காலிகமாகத் தான் வசிக்கிறோம் என்பதை கூறியதாகத் தெரிவித்தார்.
தங்களுக்கான வீட்டை தயார் செய்வதாகவும் சொல்லியிருந்தார். அதை நிறைவேற்றும் பொருட்டு, வீடு கட்டுவதற்காக ஒரு எஸ்டேட்டை வாங்கினார். என்ன மாதிரியான வீடு வாங்க வேண்டும் என்பதை பற்றி யோசனை இல்லை என்று தெரிவித்த தானும் தன் மகனும் வசதியாக வாழ்வதற்கும். விருந்தினர்கள் வந்தால் சௌகரியமாக உணர்வதற்கும் ஏற்றவாறு ஒரு வீட்டை கட்டவேண்டும் என்று நினைத்திருந்தார்.
30 ஆண்டுகளுக்கு மேல் பிரைவேட் வசிப்பிடமாக இருந்த இந்த மாளிகை, லாவேண்டருக்கு விபத்து ஏற்பட்ட பிறகு, அனைவரும் வந்து தங்கும்படி மாற்ற வேண்டும் என்ற சிந்தனை தோன்றியதாக லாவெண்டர் தெரிவித்துள்ளார். திரைப்படங்களில், வரலாற்று படங்கள், ஆவணங்களில் காட்டப்படுவது போன்ற அற்புதமான கோட்டைகளில் பொதுமக்கள் முன்பதிவு செய்து தங்கிச் செல்லலாம்.