நமது நாட்டில் தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டிடம் 1927 ஆம் ஆண்டு அப்போதைய வைஸ்ராய் இர்வின் பிரபு என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. 96 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் இப்போது தயாராக உள்ளது. ஆனால் உலகின் பல நாடுகளில் இன்னும் 600-700 ஆண்டுகள் பழமையான பிரமாண்டமான கட்டிடங்களில் நாடாளுமன்றங்கள் இயங்கி வருகின்றன.
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மே 28 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 850 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நூறாண்டுகளையும் கடந்து கம்பீரமாக நிற்கும் உலகின் சில நாடாளுமன்ற கட்டிடங்களை இப்போது பார்க்கலாம்.
இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்தின் பெயர் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை. இந்த கட்டிடம் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சீனாவின் நாடாளுமன்றம் மக்கள் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. பெய்ஜிங்கில் உள்ள இந்த கட்டிடம் 20 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. நம் நாட்டின் நாடாளுமன்றம் ஆங்கிலேயே ஆட்சியின் போது 20 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
உலகின் மிகப் பழமையான நாடாளுமன்ற கட்டிடம் ஐஸ்லாந்தில் உள்ள எல்திங்ஹுயிசிட் ஆகும். இது 930 இல் கட்டப்பட்டது. ஆனால் இது பல முறை புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. அந்தக் கட்டிடம் இன்றும் செயல்பாட்டில் உள்ளது. ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டாலும், 63 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கூட்டங்கள், தீவின் தலைநகரான ரெய்காவிக் நகரில் அமைந்துள்ள பழைய கட்டிடத்திலேயே இன்றும் நடைபெறுகின்றன.