இங்கிலாந்தின் மூன்றாம் சார்லஸ், மன்னராக முடிசூட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி இன்று லண்டனில் நடைபெற இருக்கிறது. பிரிட்டனை ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி காலமானார். இதனால் அவரின் மகன் 3ஆம் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக அறிவிக்கப்பட்டார். பிரிட்டன் மன்னராக அறிவிக்கப்பட்டபோதிலும் அவரின் முடிசூட்டு விழா இதுவரை நடைபெறாமல் இருந்து வந்தது.
70 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தின் கிரீடம் சார்லஸ் III க்கு முடிசூட்டப்பட உள்ளது. மாணிக்கங்கள், செவ்வந்திகள், சபையர்கள் போன்ற 444 விலையுயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள ஊதா நிற வெல்வெட் துணியால் உருவாக்கப்பட்ட செயின்ட் எட்வர்ட் கிரீடம் தான் மன்னராகப்போகும் சார்லஸ் III க்கு சூட்டப்பட்ட உள்ளது.
அதே போல முடிசூட்டு விழாவின்போது மன்னர் என்ன அணிவார் என்ற ஆர்வமும் இருக்கும். பக்கிங்ஹாம் அரண்மனையின் கூற்றுப்படி, இன்று முடிசூட்டும்போது 1821 இல் கிங் ஜார்ஜ் IV, 1911 இல் கிங் ஜார்ஜ் V, 1937 இல் கிங் ஜார்ஜ் VI மற்றும் 1953 இல் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாக்களில் பயன்படுத்தப்பட்ட வரலாற்று ஆடைகளையும், முடிசூட்டு வாள் பெல்ட் மற்றும் முடிசூட்டு கையுறை உள்ளிட்டவற்றையும் மன்னர் மீண்டும் பயன்படுத்துவார் என்று தெரிவித்துள்ளது.
ராஜா என்றால் ஊர்வலம் இல்லாமல் எப்படி. முடிசூட்டுவதற்கு முன்னதாக, சார்லஸ் பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியேறி, டயமண்ட் ஜூபிலி ஸ்டேட் கோச்சில் உள்ள மாலுக்குச் செல்வார். பின்னர் ஊர்வலம் அட்மிரால்டி ஆர்ச் வழியாகச் சென்று வைட்ஹாலுக்குச் சென்று, நாடாளுமன்றத் தெரு வழியாக அபேக்கு செல்லும். முடிசூட்டியதும் அதே 1.3 மைல் வழியாக மாளிகைக்கு திரும்புவார்
ஏழு தசாப்தங்களுக்கு முன்னர் நடந்த எலிசபெத் ராணியின் முடிசூட்டு விழாவை விட சார்லஸின் முடிசூட்டு விழா குறுகியதாக இருக்கும் . அப்போது, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் நேரடி அரச நிகழ்வு இது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஓடியது. ஆனால் சார்லஸ் III இன் முடி சூடு விழா காலை 11 மணிக்கு தொடங்கி இரண்டு மணி நேரத்திற்குள் நிறைவு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முடி சூடு விழாவிற்கு அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் வருகை தரவில்லை என்றாலும், அவரது மனைவி ஜில் பிடன் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்துவார். அதோடு உக்ரைனின் முதல் பெண்மணி ஒலெனா ஜெலென்ஸ்கா, உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மற்றும் அவரது மனைவி ரோசங்கலா ஜான்ஜா டா சில்வா ஆகியோர் வருகை தந்துள்ளனர்.