முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » உலகின் நம்பர் 1சொகுசு ரிசார்ட்.. ஒரு நைட் தங்க ரூ.82 லட்சமாம்.. அப்படி என்னதான் இருக்கு?

உலகின் நம்பர் 1சொகுசு ரிசார்ட்.. ஒரு நைட் தங்க ரூ.82 லட்சமாம்.. அப்படி என்னதான் இருக்கு?

Atlantis the Royal in Dubai : உலகின் மிக உயர்ந்த சொகுசு ரிசார்டில் ஒரு இரவுக்குத் தங்க ரூ.82 லட்சம் வசூலிக்கப்படுகிறது.

 • 16

  உலகின் நம்பர் 1சொகுசு ரிசார்ட்.. ஒரு நைட் தங்க ரூ.82 லட்சமாம்.. அப்படி என்னதான் இருக்கு?

  கடந்த ஜனவரி மாதம் துபாயில் Atlantis the Royal என்ற புதிய சொகுசு ஹோட்டல் மக்கள் உபயோகத்திற்குத் திறக்கப்பட்டுள்ளது. இதனின் சிறப்பு அம்சங்களைக் கேட்டால் ஆடிப்போய்விடுவீர்கள். அந்த அளவிற்கு மிகச் சொகுசாக இந்த ஹோட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 26

  உலகின் நம்பர் 1சொகுசு ரிசார்ட்.. ஒரு நைட் தங்க ரூ.82 லட்சமாம்.. அப்படி என்னதான் இருக்கு?

  Bellagio-style நீரூற்றுகள், Valentino boutique ஷாப்பிக் என்று தொடக்கமே மிக அழகாக வரவேற்பு வழங்கப்படுகிறது. இந்த ஹோட்டலில் மொத்தம் 795 அறைகள் இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 36

  உலகின் நம்பர் 1சொகுசு ரிசார்ட்.. ஒரு நைட் தங்க ரூ.82 லட்சமாம்.. அப்படி என்னதான் இருக்கு?

  நீச்சல் குளம், சொகுசான பெரிய அறைகள், விதவிதமான உணவுகள், சொகுசு பிராண்டுகளின் ஷாப்பிக் கடைகள், செயற்கை நீரூற்றுகள், தங்கம் மற்றும் மார்பிளில் உருவாக்கப்பட்டுள்ள அலங்காரப்பொருட்கள் என்று சொகுசு நிலைக்கு உச்சமே இந்த ஹோட்டல் என்பது போல் இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 46

  உலகின் நம்பர் 1சொகுசு ரிசார்ட்.. ஒரு நைட் தங்க ரூ.82 லட்சமாம்.. அப்படி என்னதான் இருக்கு?

  கெர்ஸ்னர் சர்வதேச ஹோட்டல் நிறுவனத்திற்கு சொந்தமான Atlantis the Royal என்று பெயரிடப்பட்ட இந்த சொகுசு ஷோட்டலின் மொத்த மதிப்பு சுமார் 10 ஆயிரம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பிரபல பாடகி பியோன்சே-வின் பாடல் நிகழ்ச்சியுடன் மிக பிரம்மாண்டமாக இந்த ஹோட்டல் தொடங்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 56

  உலகின் நம்பர் 1சொகுசு ரிசார்ட்.. ஒரு நைட் தங்க ரூ.82 லட்சமாம்.. அப்படி என்னதான் இருக்கு?

  இங்கு ஒரு இரவுக்குத் தங்குவதற்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் வசூலிக்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்புப்படி 82 லட்சம் ரூபாய் ஆகும். மேலும் ஹோட்டல் அறைகளில் வழங்கப்படும் அனைத்து உபயோகப்பொருட்களும் விலை உயர்ந்த சொகுசு பிராண்டுகளை சேர்ந்தது தான். மேலும் சொகுசான ஸ்பா வசதியும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 66

  உலகின் நம்பர் 1சொகுசு ரிசார்ட்.. ஒரு நைட் தங்க ரூ.82 லட்சமாம்.. அப்படி என்னதான் இருக்கு?

  வாடிக்கையாளர்களை உண்மையில் ராணி ராஜாவாக இந்த ஹோட்டல் உணரவைப்பதாக இது வரை இந்த ஹோட்டலில் தங்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.

  MORE
  GALLERIES