முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » 3200 ஆண்டுகள் பழமையான தங்க கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள்..!

3200 ஆண்டுகள் பழமையான தங்க கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள்..!

1965 ஆம் ஆண்டு முதல் மெட்ஸ்மோர் பகுதியில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,

 • 16

  3200 ஆண்டுகள் பழமையான தங்க கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள்..!

  ஆர்மீனியாவின் யெரெவனுக்கு(Yerevan.) மேற்கே சுமார் 35 கிமீ தொலைவில் அரரத் சமவெளியில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான தொல்பொருள் தளங்களில் ஒன்றான மெட்சாமோரில்(Metsamor) அகழ்வாராய்ச்சியின் போது, ​​போலந்து மற்றும் ஆர்மீனிய விஞ்ஞானிகளைக் கொண்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு இரண்டு எலும்புக்கூடுகளுடன் (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்) "தங்கக் கல்லறை" ஒன்றைக் கண்டுபிடித்தது.

  MORE
  GALLERIES

 • 26

  3200 ஆண்டுகள் பழமையான தங்க கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள்..!

  இந்த கல்லறை எகிப்தை ஆட்சி செய்த இரண்டாம் ராமேசஸ் காலத்தது. 1965 ஆம் ஆண்டு முதல் மெட்ஸ்மோர் பகுதியில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் தங்க நெக்லஸ்கள் மற்றும் சிங்கங்களின் சித்தரிப்புகளுடன் கூடிய கில்டட் பெல்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  MORE
  GALLERIES

 • 36

  3200 ஆண்டுகள் பழமையான தங்க கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள்..!

  அது ஒரு சிஸ்ட் கல்லறை, அதாவது இரண்டு எலும்புக்கூடுகள் தரையில் தோண்டப்பட்டு பெரிய கற்களால் வரிசையாக அமைக்கப்பட்ட அறைகளில் காணப்பட்டன. இதோடு ஆராய்ச்சியாளர்கள் ஒரு மர புதைகுழியின் எச்சங்களையும் கண்டுபிடித்தனர்.

  MORE
  GALLERIES

 • 46

  3200 ஆண்டுகள் பழமையான தங்க கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள்..!

  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, எலும்புகள் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. இரண்டு எலும்புக்கூடுகளும் சற்று வளைந்த கால்களைக் கொண்டிருந்தன. இந்த ஜோடி 30-40 வயதில் இறந்ததாக முதற்கட்ட மதிப்பீடுகள் காட்டுகின்றன.

  MORE
  GALLERIES

 • 56

  3200 ஆண்டுகள் பழமையான தங்க கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள்..!

  அவர்களது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை என்றாலும் அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் இறந்துள்ளார் என்று குறிப்பிடுகின்றனர். ஏனென்றால் கல்லறை மீண்டும் திறக்கப்பட்டதற்கான தடயங்கள் எதுவும் இல்லை. அந்த உடல்களோடு 3200 ஆண்டுகள் பழமையான தங்கப் பொக்கிஷத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 66

  3200 ஆண்டுகள் பழமையான தங்க கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள்..!

  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கல்லறைக்குள் 100 க்கும் மேற்பட்ட முத்துக்கள் மற்றும் மூன்று தங்க நெக்லஸ்களின் எச்சங்களை கண்டுபிடித்தனர். அவற்றில் சில செல்டிக் சிலுவைகள் போல இருந்துள்ளது. ஏராளமான கார்னிலியன் பதக்கங்களும் இருந்தன.

  MORE
  GALLERIES