அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வழக்கத்திற்கு மாறான பனிப் பொழிந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சில பகுதிகளில் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து பொழியும் பனியால் நகரம் முழுவதும் பனி போர்வையால் மூடப்பட்டுள்ளது போல் காட்சியளிக்கிறது. பெரும்பாலும் டிசம்பர் மாதத்தில் ஏற்படும் பனிப்பொழிவு தற்போது பிப்ரவரி மாதத்தில் பொழிந்து வருவது காலநிலை மாற்றத்தினால் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
1869 ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது ஏற்படும் இந்த பொழிவு தான் மிகப் பெரிய பனிப்பொழிவாகக் கருதப்படுகிறது. சாலைகளில் படர்ந்து கிடக்கும் பனியால் மக்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் வெளியில் பனி சூழ்ந்து பரந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.