அவர்களுக்கு பிரதான வருவாயாக ஆப்கானிஸ்தானில் குவிந்துள்ள கனிமச் சுரங்கங்கள் மூலம் ஆண்டுக்கு 464 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைப்பது தெரியவந்துள்ளது. இதுபோல் போதைப் பொருள் கடத்தல் மூலம் ஆண்டுக்கு 416 மில்லியன் டாலர்களும் வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் ஆண்டுக்கு 240 மில்லியன் டாலர்களும் கிடைத்து வருகிறது.
மேலும், கடத்தல் மற்றும் தனி நபர்களுக்குப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் 160 மில்லியன் டாலர்களை தாலிபான்கள் ஈட்டுவதும் தெரியவந்துள்ளது. இதுபோக ரியல் எஸ்டேட் மூலம் ஆண்டுக்கு 80 மில்லியன் டாலர் வருமானத்தையும் தாலிபான்கள் ஈட்டி வருகின்றனர். முன்பு வெளிநாட்டு நிதியை அதிகம் நம்பி இருந்த தாலிபான்கள் தற்போது அதனை குறைத்துக் கொண்டுள்ளனர்.