இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா- தலிபான்கள் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பக்ரம் விமான தளத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க படைகள் வெளியேறியது.
ஆப்கன் தாலிபான் மற்றும் ஆப்கன் இராணுவத்திற்கு இடையிலான மோதல்கள் நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் நடந்து வருகின்றன. மேலும் இரு தரப்பினரும் தாங்கள் வெற்றி பெற்றதாகவும் போர் உத்திகளைப் பற்றியும் கூறுகின்றனர். தாலிபான் நிறையப் பகுதிகளில் வெற்றி பெற்றுவருகிறது என்று செய்திகள் வருகின்றன. குறிப்பாக, கிராமப் புறப் பகுதிகளை தாலிபான் கைப்பற்றிவருகிறது.
தாலிபான்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்புவதுடன் துப்பாக்கியுடன் தாங்கள் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவருகின்றனர். இந்தப் பெண்கள் ஆப்கானிஸ்தான் தேசிய இராணுவத்திற்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர். தாலிபன்களுடன் அரசாங்கத்தால் தனியாகப் போராட முடியாது, எனவே தாங்களும் அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் ஆதரவாக நிற்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.