தென்னாப்பிரிக்காவில் வனவிலங்கு காப்பகம் ஒன்றில் இருந்த 8 சிங்கங்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளன. ரஸ்டன்பர்க் நகரில் உள்ள காப்பகத்தில் இருந்த 8 சிங்கங்கள் திடீரென்று இறந்து கிடந்தன.
2/ 4
அவற்றின் பற்கள் மற்றும் நகங்கள் அகற்றப்பட்டிருந்த நிலையில் சிங்கங்கள் இறந்து கிடந்த காட்சி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
3/ 4
கோழி இறைச்சியில் விஷம் வைத்து இந்த சிங்கங்கள் கொல்லப்பட்டதாகவும், பில்லி சூனியம்,ஏவல் போன்றவற்றை செய்வதற்காக இவற்றின் பற்கள் மற்றும் நகங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் காப்பகத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.
4/ 4
விஷம் அருந்திய சிங்கத்திடம் பால் குடித்த இரண்டு குட்டிகளும் பலியானதாகவும், உயிரிழந்த இரண்டு சிங்கங்கள் ஆறு குட்டிகளை பிரசவிக்க இருந்த நிலையில் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.