சன்மென்ஷியா நகரில் நடத்தப்பட்ட ஆய்வின்போது வெண்கலப் பாத்திரம் ஒன்றில் இந்த மது அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. ஹான் பேரரசு கால கட்டத்தைச் சேர்ந்த இந்த மது மருத்துவ காரணங்களுக்காக தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மதுவில் அபாயகரமான நச்சுகள் எதுவும் இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பழமையான கல்லறை ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த மது அருந்தும் தன்மை கொண்டதா என்பது பற்றிய விவாதங்கள் தற்போது தொடங்கியுள்ளன.