இதுவரை ஏலத்தில் விற்கப்பட்ட பிரதிகளின் அதிகபட்ச விலைகளில் இதுவும் ஒன்றாகும். 2021 ஆம் ஆண்டில், அமெரிக்க அரசியலமைப்பின் அரிய நகல் 43 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது. லியோனார்டோ டாவின்சியின் கோடெக்ஸ் லீசெஸ்டர் 1994-ல் 31 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. இது இன்றைய டாலர்களில் சுமார் 60 மில்லியன் டாலர்களுக்குச் சமமாக இருக்கும்.
1978 ஆம் ஆண்டில், பைபிள் கோடெக்ஸ், ஜூரிச்சில் உள்ள சோதேபிஸ் நிறுவனத்தால் பிரிட்டிஷ் ரயில் ஓய்வூதிய நிதிக்கு சுமார் 320,000 டாலர் அதாவது இன்றைய டாலர்களில் 11 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு கோடெக்ஸ் சாஸூனை, வங்கியாளரும் கலை சேகரிப்பாளருமான ஜாக்கி சஃப்ராவுக்கு விற்றனர். 1989-ல் 31.9 மில்லியன் டாலர் மதிப்பில் (இன்றைய டாலரில் 77 மில்லியன்) அவர் வாங்கினார்.