

மக்களவைத் தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் இங்கு உள்ள வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலம் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரியை எளிமையாக மாற்றலாம்.


தேசிய வாக்காளர் அடையாள் சேவை இணையதளம் (https://www.nvsp.in/) சென்று ‘Form 6’-ஐ தேர்வு செய்து “Apply online for registration of new voter/due to shifting from AC” என்பதை கிளிக் செய்யவும்.


மாநிலம், மாவட்டம், தொகுதி போன்ற விவரங்களை அளித்து எதற்காகத் தொகுதியை மாற்ற வேண்டும் என்பதைத் தேர்வு செய்து முகவரியை மாற்றலாம்.


வாக்காளரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், போன்ற விவரங்களை ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் அளிக்க வேண்டும்.


வயது சான்றாக பிறப்பு சான்றிதழ், பள்ளி படிப்பு சான்றிதழ்கள், பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப் பதிவேற்ற வேண்டும்.


முகவரி சான்றாக பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு, டெலிபோன் பில், மின்சார கட்டணம், எரிவாயு கட்டணம், போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.


மேலே கூறிய விவரங்களை எல்லாம் அளித்த பிறகு captcha குறியீட்டை உள்ளிட்டு, விவரங்களைச் சரிபார்த்த பிறகு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.