

வாட்ஸ்அப் செயலியை 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் பயன்படுத்த முடியும். பொதுவாக வாட்ஸ்அப் உங்கள் ஃபோன் என்ன மொழியில் உள்ளதோ அதற்கு ஏற்றவாறு மாறும்.


உதாரணத்திற்கு உங்கள் ஃபோனின் மொழியைத் தமிழில் மாற்றினால் வாட்ஸ்அப் செயலியும் தமிழுக்கு மாறிவிடும்.


ஆண்டிராய்டு ஃபோனில் மொழியை மாற்ற “Settings - System - Languages input - Languages” என்பதற்குச் சென்று Add a language என்பதை கிளிக் செய்து மொழியை மாற்றிக்கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் ஆண்டிராடு ஃபோனில் வாட்ஸ்அப் செயலியில் “More options - Settings - Chats - App Language” என்பதற்குச் சென்று மொழியை மாற்றிக்கொள்ளும் தெரிவும் உள்ளது.


ஐபோன் எனில் “iPhone Settings - General- Language Region - iPhone Language” என்பதற்குச் சென்று மொழியைத் தேர்வு செய்யலாம்.


விண்டோஸ் ஃபோன் என்றால் “Settings - Time & language - Language. Tap Add languages” என்று மொழியை மாற்றலாம்.


ஜியோ ஃபோன் எனில் ‘Settings - Personalization - Language’என்ற இடத்திற்குச் சென்று மொழியை மாற்றலாம்.