மக்களவை தேர்தல் 2019: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?
வர இருக்கும் மக்களவை தேர்தல் 2019-ல் வாக்களிக்க உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். எனவே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.


17-வது மக்களவை தேர்தல் அடுத்தச் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலின் போது வாக்களிக்க உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தால் ஆதார் அல்லது பிற அரசு அடையாள ஆவணங்களையும் காண்பித்தும் வாக்களிக்க முடியும். எனவே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.


வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என்று சரிபார்க்க www.nvsp.in என்ற தேசிய வாக்காளர் சேவைப் பிரிவு இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். (Image: National Voters’ Service portal)


மேலே இடது பக்கம் உள்ள ‘Search Your Name in Electoral Roll’ என்பதைத் தேர்வு செய்யவும். (Image: National Voters’ Service portal)


வாக்காளர் அடையாள எண் (Search by EPIC number) அல்லது "Search by details" என்பதைத் தேர்வு செய்யவும். (Image: National Voters’ Service portal)


வாக்காளர் அடையாள எண் (Search by EPIC number) தேர்வு செய்யும் போது அதற்கான விவரங்களை அளித்துத் தேடு (Search) என்ற பொத்தானை அழுத்த வேண்டும். (Image: National Voters’ Service portal)


உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் வார்டு குறித்த விவரங்கள் கீழே காண்பிக்கப்படும். ஒருவேலை எந்த விவரங்களும் காண்பிக்கவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்று அர்த்தமாகும்.


மாற்றாக "Search by details" என்பதைத் தேர்வு செய்யும் போது உங்கள் பெயர், வயது, பிறந்த தேதி, மாநிலம், பாலினம் மற்றும் மாவட்டம் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும். இந்த விவரங்களை எல்லாம் கொடுக்கப்பட்ட படிவத்தில் அளித்துத் தேடும் போது எளிதாக வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்று தெரிந்துகொள்ளலாம்.