2. இப்போது நீங்கள் பதிவு செய்துள்ள தொலைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு ஒடிபி எண் வரும். அதனைக் கொண்டு உங்கள் சுயவிவர பக்கத்திற்கு உள்நுழையவும். 3. இப்போது, நீங்கள் TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான டேப்-ஐ பார்ப்பீர்கள். (இதில் கூடுதல் வசதிகளான பெயர் நீக்குதல், மாற்றுதல், சேர்த்தல் போன்ற வசதிகளும் இருக்கும்)
4. உங்களுடைய மொழியைத் தேர்ந்தெடுத்து அதன் பின்பு PDF ஃபைலை சேமிக்க, சேமி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.அதன் பின்பு அந்த பக்கத்தை பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும். 5. உங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால் போதும் உங்களுக்கு மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.