முகப்பு » புகைப்பட செய்தி » Explainers » அடிக்கடி பாராசிட்டமாலை எடுத்துக்கொள்ளலாமா? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..

அடிக்கடி பாராசிட்டமாலை எடுத்துக்கொள்ளலாமா? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..

Paracetamol : பாராசிட்டமாலை அடிக்கடி பயன்படுத்துவதால், உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியாது.

  • 15

    அடிக்கடி பாராசிட்டமாலை எடுத்துக்கொள்ளலாமா? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..

    பாராசிட்டமால், ஒரு ஓவர்-தி-கவுண்டர் மருந்தாக, தலைவலி, காய்ச்சல் மற்றும் பிற லேசான உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் பெரும்பாலான மக்களின் முதல் விருப்பமாக உள்ளது. பொதுவாகவே ​​​​ஒரு மருந்து மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும்போது, ​​​​அதை பற்றி நாம் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்படியாக இன்று, பாராசிட்டமால் தொடர்பான சில கட்டுக்கதைகளை உடைத்து, அதை பற்றிய சில மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முனைப்பின் கீழ் உருவானதே இக்கட்டுரை!

    MORE
    GALLERIES

  • 25

    அடிக்கடி பாராசிட்டமாலை எடுத்துக்கொள்ளலாமா? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..

    பாராசிட்டமாலைப் பயன்படுத்துவதை சுற்றியுள்ள மிகவும் பொதுவான கட்டுக்கதைகளில் ஒன்று என்னவென்றால், நீங்கள் விரும்பும் போதெல்லாம் பாராசிட்டமாலைப் பயன்படுத்தலாம், ஒருவரின் தேவைக்கு ஏற்றபடி எத்தனை பாராசிட்டமாலை வேண்டுமானாலும் கூட உட்கொள்ளலாம் என்பதே ஆகும். ஆனால், மக்கள் பொதுவாக பாராசிட்டமாலின் டோஸ் வழிமுறைகளை புறக்கணித்து, அதை அதிகமாக உட்கொள்ள முனைகிறார்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். வல்லுநர்கள், பாராசிட்டமால் திறம்பட செயல்பட அதை சரியான அளவுகளில் பயன்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 35

    அடிக்கடி பாராசிட்டமாலை எடுத்துக்கொள்ளலாமா? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..

    இப்படி பாராசிட்டமால் தொடர்பான பல கட்டுக்கதைகள் இணையத்தில் உள்ளன. அதில் மிகவும் வேடிக்கையான ஒரு கட்டுக்கதை - ஒரு முறை பாராசிட்டமாலை உட்கொண்டால், அது நம் உடலில் 5 ஆண்டுகள் வரை இருக்கும் என்பதே ஆகும். இது முழுக்க முழுக்க ஒரு பொய்யான தகவல் ஆகும். மருந்தை உட்கொண்ட 24 மணி நேரத்திற்குள் அது நோயாளியின் உடல் அமைப்பை விட்டு வெளியேறி விடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் மருந்தின் விளைவும் 4 முதல் 6 மணி நேரம் மட்டுமே நீடிக்குமாம்.

    MORE
    GALLERIES

  • 45

    அடிக்கடி பாராசிட்டமாலை எடுத்துக்கொள்ளலாமா? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..

    அதிக அளவில் பாராசிட்டமால் உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது ஒருபக்கம் இருக்க, உங்கள் உடல் குறிப்பிட்ட மருந்தை சார்ந்து இருக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது பாராசிட்டமாலை அடிக்கடி பயன்படுத்துவதால், உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியாது. இது எங்கே சென்று முடியும் என்றால், எந்தவொரு சிறிய உடல்நலக்கோளாறாக இருந்தாலும் சரி - உண்மையிலேயே பாராசிட்டமால் அதற்கு ஒரு தீர்வாக இருக்காது என்றாலும் கூட - ஒரு பாராசிட்டமாலை போட்டால் தான் சரியாகும் என்கிற உளவியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்குமாம். 

    MORE
    GALLERIES

  • 55

    அடிக்கடி பாராசிட்டமாலை எடுத்துக்கொள்ளலாமா? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..

    அப்போது உண்மையில் பாராசிட்டமால் என்றால் என்ன? பாராசிட்டமால் என்பது ஒரு பொதுவான வலி நிவாரணியாக ஆகும். இது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் வலிநிவாரணி மருந்து வகையை சேர்ந்தது. பாராசிட்டமால் என்பது அசெட்டமினோஃபென், பனாடோல் அல்லது டைலெனால் (acetaminophen, Panadol or Tylenol) என்றும் அழைக்கப்படும் மருந்துக்கான பிராண்ட் பெயர் ஆகும். இந்த மருந்து 1956 ஆம் ஆண்டில் அதன் முதல் மருத்துவப் பயன்பாட்டைக் கண்டது மற்றும் முன்னரே குறிப்பிட்டபடி இது உலகளவில் வெவ்வேறு பெயர்களின் கீழ் பயன்படுத்தப்படுகிறது.

    MORE
    GALLERIES