

தீபாவளிக்கு விஜய் - தனுஷ் படங்கள் நேரடியாக மோதவுள்ள நிலையில், சூரியும் கதாநாயகன் அவதாரம் எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


விஜய் நடிக்கும் பிகில் படம் தீபாவளிக்கு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தனுஷ் நடிக்கும் பட்டாசு படமும், தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தீபாவளிக்கு பிகில் - பட்டாசு படங்கள் மோதும் என்று தெரிகிறது


இரும்புத்திரை படத்தின் இயக்குனரான மித்ரன் இயக்கத்தின் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் ஹீரோ திரைப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபல இயக்குனரான பிரியதர்ஷனின் மகள் கல்யாணி கதாநாயகியாக நடிக்கிறார்.


வடிவேலு, சந்தானம் ஆகிய நகைச்சுவை நடிகர்கள், ஹீரோவாக நடித்து வரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது சூரியும் இணைந்துள்ளார். வெற்றிமாறன் இயக்கும் புதிய திரைப்படத்தில் சூரி, ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.