

ஜே.கே ரித்திஷ் நடித்த நாயகன், ஆர்.கே.சுரேஷ் நடித்த பில்லாபாண்டி ஆகிய படங்களை இயக்கியவர் குட்டிப்புலி சரவண சக்தி. இவர் அடுத்ததாக வித்தியாசமான கதைக்களத்துடன் விமல் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் தான்யா ஹோப் நாயகியாக நடிக்கிறார். மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.


எம்ஐகே புரொடக்ஷன்ஸ் சார்பாக இளையராஜா தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்ட நிலையில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. விரைவில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


விமல் நடிப்பில் கடைசியாக கன்னிராசி என்ற படம் வெளியானது. முத்துக்குமரன் இயக்கி இருந்த இந்தப் படத்தில் வரலட்சுமி, பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்திருந்தனர். அடுத்ததாக மஞ்சள் குடை உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்து வரும் விமல் தற்போது குட்டிப் புலி சரவணன் சக்தி இயக்கத்தில் நடிக்கிறார்.