இந்த முதல்கட்டப் படப்பிடிப்பில் பகத் பாசில் கலந்து கொள்ளவில்லை. கமலும், விஜய் சேதுபதியும் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகின்றன. லோகேஷ் கனகராஜ், கமல், விஜய் சேதுபதி, ஒளிப்பதிவாளர் க்ரிஷ் கங்காதரன் ஆகியோர் படக்குழுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.