பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் தான் கர்ப்பமடைந்திருப்பதை சோஷியல் மீடியாவில் அறிவித்துள்ளார்.
2/ 6
புதுக்கோட்டையிலிருந்து சரவணன், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் ஸ்ரீதேவி அசோக், செல்லமடி நீ எனக்கு என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
3/ 6
சன் டிவி, ஸ்டார் விஜய், ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல்வேறு முன்னணி தொடர்களில் நடித்திருக்கும் இவர் தற்போது பூவே உனக்காக என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
4/ 6
வாணி ராணி, செம்பருத்தி, அரண்மனைக் கிளி உள்ளிட்ட பல முன்னணி தொடர்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் ஸ்ரீதேவி அசோக் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவ்வாக இருக்கிறார்.
5/ 6
நேற்று காதலர் தினத்தன்று பெரும்பாலான நட்சத்திரங்கள் இன்ஸ்டாகிராமில் புதிய போஸ்டுகளை பதிவிட்ட நிலையில் ஸ்ரீதேவி அசோக் தான் கர்ப்பம் தரித்து 4 மாதங்களாகியிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
6/ 6
ஸ்ரீதேவி அசோக் மற்றும் அவரது கணவருக்கு சின்னத்திரை ரசிகர்களும், நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.