ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகத்தை அழைத்து வந்து மேற்கூறிய பிரபலங்களுக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை சங்கம் என்ற அந்த அமைப்பு. அதன் அழைப்பிதழில் அழைப்பிதழில் இந்திய அரசின் முத்திரையும் அண்ணா பல்கலைக்கழக பெயரும் அச்சிடப்பட்டிருந்தது.
நிகழ்வுக்கு அரங்கை அளித்ததைத் தவிர, சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்று கூறப்பட்ட அந்த அமைப்புக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ், “பொதுவாக ஹோட்டல்களில் வைத்து இதுபோன்ற விருது நிகழ்ச்சிகளை தனியார் அமைப்புகள் நடத்துவது வழக்கம். ஆனால் பல்கலைக்கழக வளாகத்தில் இதுபோன்ற கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது கண்டிக்கத்தக்க ஒன்று.
நீதிபதி வள்ளிநாயகத்திடம் இந்நிகழ்வு அண்ணா பல்கலைக்கழத்தில் நடைபெறுகிறது என்றும், எங்களிடம் நீதிபதி பங்கேற்கிறார் என்றும் கூறி அவர்கள் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இதற்காக நாங்கள் வருந்துகிறோம். இதுதொடர்பாக போலீஸிடம் புகாரளித்துள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.