நடிகர் விஜயின் மனைவி சங்கீதா 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ல் பிறந்தார். சங்கீதா விஜயின் பூர்வீகம் இலங்கை பூவே உனக்காக படத்தில் விஜயின் நடிப்பை கண்டு ரசிகையாக மாறியுள்ளார் சங்கீதா. ரசிகையாக சென்னை வந்த சங்கீதா விஜயின் மீது காதல் கொண்டு பின்னர் அவரது மனைவியானார். இவர்களது திருமணம் 1999 ஆம் தேதி ஆகஸ்ட் 25ல் நடந்தது. நடிகர் விஜய் தனது மனைவியை செல்லமாக கீதா என்று அழைப்பாராம். இவர்களது மகன் சஞ்சய் 2000 ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார். இவர்களது மகள் சாஷா 2005 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். சங்கீதாவின் தந்தை சொர்ணலிங்கம் லண்டனுக்கு புலம்பெயர்ந்த தொழிலதிபர். தனது அப்பாவை போல் சங்கீதாவும் பிஸினஸ் மைண்ட் கொண்டவராம். விஜய் தொடர்பான அனைத்து விழாக்களிலும் தவறாமல் பங்கேற்பார். விஜய் பங்கெடுக்க முடியாத நடிகர்கள் திருமண விழாக்களில் சங்கீதா முகம் காட்டுவார். நடிகையும், அஜித்தின் மனைவியுமான ஷாலினியும் சங்கீதாவும் நல்ல தோழிகள்.