அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?... ட்விட்டரை ஆக்கிரமித்த விஜய், அஜித், ரஜினி ரசிகர்கள்
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து மீண்டும் கிளம்பியதால் ட்விட்டர் ட்ரண்டிங்கை ஆக்கிரமித்த விஜய், அஜித், ரஜினி ரசிகர்கள்
News18 Tamil | September 1, 2019, 10:14 AM IST
1/ 9
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து மீண்டும் கிளம்பியதால் ட்விட்டர் ட்ரெண்டிங்கை ஆக்கிரமித்த விஜய், அஜித், ரஜினி ரசிகர்கள்
2/ 9
தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்றும் ரஜினியை அவர் முந்திவிடுவார் என்றும் சீமான் கூறியிருந்த நிலையில், #அன்புள்ள_ரஜினிவிஜய் என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் உருவாக்கி டிரெண்டாக்கினர்.
3/ 9
தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்றும், அஜித் என்றும் பரஸ்பரம் அவரவர் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், என்றுமே ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என ரஜினிகாந்த் ரசிகர்களும் கூறி வருகின்றனர்.
4/ 9
இந்நிலையில், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் எனவும், அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்தார். இணையம் மட்டுமல்லாது பல்வேறு தரப்பிலும் இது விவாதப் பொருளானது.
5/ 9
ஆனால், ரஜினி - விஜய் ரசிகர்களிடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் வகையில் யாரும் கருத்து கூற வேண்டாம் என்று உணர்த்தும் வகையில் இணையத்தில் #அன்புள்ள_ ரஜினிவிஜய் என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.
6/ 9
மேலும் ஒவ்வொரு கால கட்டத்துக்கமான சூப்பர் ஸ்டார் யார் என்பதை குறிக்கும் வகையில், எம்ஜிஆர், ரஜினியை அடுத்த விஜய் தான் என அவரது ரசிகர்கள் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். அதில் ரஜினியும், விஜயும் இணைந்திருக்கும் புகைப்படங்களை பதிவேற்றி வருகின்றனர்.
7/ 9
இது ஒருபக்கம் என்றால், எம்ஜிஆருக்குப் பிறகு, எப்பவுமே அஜித்தான் என்ற ரீதியில் அஜித்தின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் தங்கள் பங்கிற்கு #மக்கள்திலகம்அஜித் என்ற புதிய ஹேஷ்டேக் ஒன்றை போட்டுள்ளனர்
8/ 9
#மக்கள்திலகம்அஜித் என்ற ஹேஷ்டேக் மூலம் எம்ஜிஆர், அஜித் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்
9/ 9
அண்மையில் #கைப்புள்ளவிஜய் மற்றும் #என்றும்தல என்ற ஹேஷ்டேக் மூலம் இருதரப்பு ரசிகர்களும் இணையத்தில் மோதிய நிலையில் தற்போது மீண்டும் டிரெண்டிங் செய்யும் போரில் ஈடுபட்டுள்ளனர்.