க்யூட் சிரிப்புடன் அழகாக போஸ் கொடுக்கும் இந்த சிறுமி வேறு யாருமல்ல? பூ படத்தில் அறிமுகமாகி தனுஷின் மரியான் படம் மூலம் தமிழில் அதிகம் அறியப்பட்ட பார்வதிதான்.
2/ 8
கேரளாவில் பிறந்த பார்வதி 2006ம் ஆண்டு அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் கேரள திரையுலகில் அறிமுகம் ஆனார்
3/ 8
தமிழில் பூ திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார் பார்வதி. பக்காவான கிராமத்து பெண்ணாவகவே அந்த படத்தில் வாழ்ந்திருப்பார்.பின்னர் மரியான் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். உத்தம வில்லன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்
4/ 8
தமிழில் சில படங்கள்தான் என்றாலும் மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் பார்வதி. நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து ஸ்கோர் செய்வது பார்வதியில் ஸ்டைல்
5/ 8
பார்வதி ரீல் நாயகி மட்டுமல்ல. ரியலிலும் நாயகிதான். சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது, திரைத்துறையில் நடக்கும் பிரச்னைகளை அச்சமில்லாமல் வெளிப்படுத்துவது என பார்வதி பல சம்பவங்களை செய்துள்ளார்
6/ 8
பார்வதி மேனன் என்ற தன்னுடைய பெயரில் இருந்த மேனன் என்பதை அதிரடியாக நீக்கினார். சாதி பெயர் எனக்கு வேண்டாமென தடாலடியாக அறிவித்து கவனிக்க வைத்தவர்
7/ 8
பெண்களுக்கு எதிரான வசனம் இடம்பெற்றதால் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி படத்தையே மேடையில் விளாசினார். மம்முட்டி ரசிகர்கள் பல எதிர்ப்புகளை தெரிவித்த நிலையிலும் சொன்ன கருத்தில் விடாப்பிடியாக நின்றார்
8/ 8
தமிழில் இடைவெளி விட்டிருந்த பார்வதி தற்போது பாரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடித்து வருகிறார்