அஜித் தனது அடுத்த படத்துக்காக உடல் எடையைக் குறைத்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
2/ 7
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார்.
3/ 7
இந்தப் படத்துக்குப் பின் அஜித்தின் 60-வது படத்திலும் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 29-ம் தேதி துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
4/ 7
பைக் ரேஸர் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க இருக்கும் இந்தப் படம் ஆக்ஷன் கலந்த கமெர்ஷியல் படமாக உருவாக உள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
5/ 7
இந்நிலையில் இந்தப் படத்துக்காக நடிகர் அஜித் தனது உடல் எடையை குறைத்து வருகிறார். சமீபத்தில் சமூகவலைதளங்களில் வெளியாகும் புகைப்படங்கள் இதை நமக்கு உணர்த்துகின்றன.
6/ 7
இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அருண் விஜய் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
7/ 7
ஸ்லிம் ஆக மாறி வரும் அஜித்தின் சமீபத்திய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.