கர்நாடகாவை சேர்ந்த ஆஷா இன்ஜினியரிங் படித்துள்ளார். நடிப்பு மீதான ஆர்வத்தால் மாடலிங் செய்து அதன் மூலம் கன்னட சேனல்களில் நடித்து வந்தார். பின்னர் தமிழ் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்கவே கோகுலத்தில் சீதை சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார். 2019ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீரியலில் தற்போது நடித்து வருகிறார்.