இளவரசி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகர் அருண் ராஜன். அழகி, சந்திரலேகா, வாணி ராணி, கல்யாண பரிசு, இளவரசி, அழகி போன்ற பல பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் சன் டிவி-யில் பூவே உனக்காக சீரியலில் செல்வம் மற்றும் சந்திரலேகாவில் சபரிநாதன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதில் சந்திரலேகா சீரியலில் இருந்து மார்ச் மாதம் விலகினார்.