2018-ஆம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளியான திருமணம் என்ற தொடரில் கோபிகாந்த் இயக்கத்தில் சந்தோஷ் என்ற பெயரில் நடித்திருந்தார். இந்த சீரியலில் கதாநாயகியாக ஸ்ரேயா அஞ்சன் என்பவர் நடித்திருந்தார். இவர்களது காம்பினேஷன் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. சீரியலில் மட்டுமல்ல, நிஜத்திலும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் திருமணம் செய்துக் கொண்ட இவர்கள் கடந்த பிப்ரவரியில் கார் வாங்கினார்கள்.