தனது பீஸ்ட் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு சன் டிவி-யின் விஜய்யுடன் நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் விஜய். இதனை அப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தொகுத்து வழங்கினார். 10 வருடத்திற்குப் பிறகு சின்னத்திரையில் விஜய் பேட்டி கொடுப்பதால், ஆவலுடன் இதை பார்த்து மகிழ்ந்தனர் ரசிகர்கள்.
7வது விஜய் டிவி விருதுகள் விழா கோலாகலமாக நடைபெற்றது. விஜய் டி.வி. சீரியல்களுக்கு மட்டுமின்றி ஷோக்கள், விஜய் டி.வி. ஆங்கர்களுக்கும் விருதுகள் அதில் வழங்கப்பட்டன. அதில் காற்றுக்கென்ன வேலி சீரியலுக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. இதையடுத்து. ”நான் பார்த்த பெரும்பாலான தொடர்களை விட மிகச் சிறந்தது, பிறகு ஏன் இந்த பாரபட்சமான நடுவர் மன்றம்? யாரும் பார்க்க விரும்பாத கருப்பு ஆடுகளா நாங்கள்? மற்ற சீரியல்களை விளம்பரப்படுத்துவது போல் விஜய் டிவி ஏன் காற்றுக்கென்ன வேலியை விளம்பரப்படுத்துவதில்லை?” எனக் கேட்டிருந்தார் அந்த சீரியலில் நடித்து வரும் மரகதம் ஷியமளா.