அந்த பதிவில், ''என் தாய் தந்தையின் கனவை வீடு வாங்கி நிறைவேற்றுவேன் என நான் நினைத்ததேயில்லை. உங்களுக்கும் இதுப்போன்ற கனவு இருந்தால் உங்களது கடின உழைப்பின் மூலமாகவும் உங்கள் பெற்றோரின் ஆதரவு மூலமாகவும் கண்டிப்பாக நிறைவேறும். எனக்கு 19 வயதாக இருக்கும்போது இந்த வீட்டைப் பார்த்து பதிவு செய்தோம். ஆனால் பல பிரச்சினைகள் காரணமாக இந்த வீட்டுக்குள் நுழைவதற்கு சரியான நேரம் அமையாமல் இருந்தது. இறுதியாக அது தற்போது நடந்துவிட்டது. கடவுளுக்கு நன்றி. 19 வயதில் நான் ஒரு வீட்டை சொந்தமாகுவேன் என நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.