யாரடி நீ மோகினி நக்ஷத்ரா, தனது லேட்டஸ்ட் கர்ப்பகால படங்களை பகிர்ந்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா ஹிட் தொடரான 'யாரடி நீ மோகினி' சீரியலில் வெண்ணிலாவாக நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை நக்ஷத்ரா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றி வரும் விஷ்வா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரின் தாத்தா உடல்நலக்குறைவாக இருந்த காரணத்தினால், இவர்களது திருமணம் விரைவாக நடந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார் நக்ஷத்ரா. சமீபத்தில் நக்ஷத்ராவுக்கு வளைகாப்பும் நடந்தது. இந்நிலையில் தற்போது தனது கர்ப்பகால படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார் நக்ஷத்ரா.