விஜய் டிவி மணிமேகலை 2 லட்சம் மதிப்புள்ள பைக்கை தொலைத்து விட்டு, 5 லட்சம் சம்பாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
2/ 9
சன் மியூஸிக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை.
3/ 9
இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஹூசைன் என்ற நடன இயக்குநரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சன் குழுமத்திலிருந்து விஜய் டிவிக்கு மாறினார்.
4/ 9
மிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 2 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ளார்.
5/ 9
அந்நிகழ்ச்சியின் மூன்று சீசன்களிலும் மணிமேகலை இடம்பெற்றிருக்கும் நிலையில், அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
6/ 9
சில வாரங்களுக்கு முன்பு தனது கணவரின் விலை உயர்ந்த இருசக்கர வாகனமான கே.டி.எம் பைக் திருடு போய்விட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
7/ 9
திருமணத்திற்கு பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு அந்த இரு சக்கர வாகனத்தை வாங்கியதாகவும், அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
8/ 9
இந்நிலையில் குக் வித் கோமாளி செட்டில் சோகமாக இருந்த மணிமேகலை குறித்து அவரின் 2 லட்சம் மதிப்புள்ள பைக் தொலைந்ததை கூறினார் செஃப் வெங்கடேஷ் பட்.
9/ 9
மேலும் தொடர்ந்த அவர் தொலைந்தது என்னவோ 2 லட்சம் மதிப்புள்ள பைக், ஆனால் அதன் மூலம் அவர் 5 லட்சம் சம்பாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.