பாண்டியன் ஸ்டோர்ஸ், விஜே சித்ரா கணவர்" width="590" height="590" /> பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வந்தவர் வி.ஜே.சித்ரா.
2/ 13
இவர் முதலில் தொகுப்பாளினியாக இருந்து பின்பு சீரியல் நடிகையானவர்.
3/ 13
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவர் ஏற்று நடித்த முல்லை கதாபாத்திரம் சித்ராவுக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது.
4/ 13
இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி பூந்தமல்லியில் உள்ள தனியார் ஹோட்டல் அறையில் சடலமாகக் கிடந்தார் சித்ரா.
5/ 13
முன்னதாக சித்ராவுக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது.
6/ 13
ஆனால் அவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்துக் கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்த விஷயம் சித்ரா மரணத்திற்குப் பிறகு தான் வெளியுலகிற்கு தெரிய வந்தது.
7/ 13
சம்பவத்தன்று சித்ராவும், ஹேம்நாத்தும் ஒன்றாகவே ஹோட்டல் அறையில் இருந்திருக்கிறார்கள்.
8/ 13
இதையடுத்து தனது மகளை கொலை செய்துவிட்டு, அதை ஹேமந்த் தற்கொலையாக மற்றுவதாக சித்ராவின் தாயார் புகாரளித்தார்.
9/ 13
சித்ரா மரண வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேமந்த் நிபந்தனை ஜாமினில் வெளியில் வந்திருக்கிறார்.
10/ 13
தற்போது அவரின் மரண வழக்கு மீண்டும் சூடு பிடித்திருக்கிறது.
11/ 13
இதற்கிடையே மே 2-ம் தேதியான இன்று சித்ராவின் 30-வது பிறந்தநாள்.
12/ 13
இதையொட்டி இன்ஸ்டாகிராமில் சித்ராவுக்காக பல உருக்கமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.
13/ 13
மிஸ் யூ சித்து என சித்ரா மீதுள்ள தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.