வி.ஜே.திவ்யா தனது கணவர் ஷிபு தரக்கனுடன் விதவிதமான படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு வருகிறார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமாகியிருக்கிறார்கள். அதில் குறிப்பிடத் தகுந்த ஒருவர் வி.ஜே.திவ்யா. பாடகியான இவர், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கினார். அதோடு மலையாளத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். அதோடு வில்லு, தீராத விளையாட்டுப் பிள்ளை உள்ளிட்ட படங்களிலும் பாடி உள்ளார். அதோடு தொழில் முனைவோராகவும் இருந்து வருகிறார் திவ்யா. சேலைகளுக்கான சொந்த பிராண்டை வைத்திருக்கும் திவ்யா, அதற்கான மாடலாக தானே இருந்து வருகிறார். இவர் தனது நீண்ட நாள் நண்பர் ஷிபு தரக்கனை கடந்த 2019-ல் திருமணம் செய்துக் கொண்டார். கணவருடன் வெளிநாடுகளில் சுற்றுலா செல்லும் திவ்யா, அந்தப் படங்களை தவறாமல் இன்ஸ்டகிராமில் பதிவிட்டு வருகிறார். அதற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.