விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார் அர்ச்சனா. ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் இவருக்கான ரசிகர் கூட்டம் அதிகம் என்று தான் கூற வேண்டும். தனது துறுதுறுப்பான பேச்சின் மூலம் அர்ச்சனா அனைவரையும் கவர்ந்துவிடுவார். அர்ச்சனாவிற்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் அர்ச்சனா பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கருப்பு நிற மினி ட்ரெஸில் பைக்கில் சாய்ந்தப்படி போஸ் கொடுத்துள்ளார் அர்ச்சனா. உடைக்கு ஏற்றவாறு கருப்பு நிற ஹீல்ஸ் அணிந்து கூடுதல் அழகாக இருக்கிறார். சாண்டல் நிற ஃபியூஷன் உடை அர்ச்சனாவிற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. புடவையை கூட எப்படி மாடர்னாக கட்ட வேண்டும் என்பதை அர்ச்சனாவிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். அழகிய ஃப்ளோரல் புடவையில் ரசிக்க வைக்கிறார் அர்ச்சனா. புடவைக்கு ஏற்றது போல் ஃபுல் சிலீவ் ஜாக்கெட் அணிந்துள்ளார். மொத்தத்தில் அர்ச்சனாவின் இந்த லுக் செம்ம கிளாஸாக உள்ளது.