விஜய் டிவி சீரியல் நடிகை வைஷ்ணவி ராஜசேகருக்கு அவரது காதலருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று ‘காற்றின் மொழி’ சஞ்சீவ் - ப்ரியங்கா முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் ‘காற்றின் மொழி’ தொடரில் ரோஸி என்ற கேரக்டரில் நடிப்பவர்தான் வைஷ்ணவி ராஜசேகர். நடிகை வைஷ்ணவி ராஜசேகருக்கும் அவரது காதலர் சாய் விக்னேஷ்வருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் நடைபெற்ற புகைப்படத்தை வைஷ்ணவி ராஜசேகர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் வைஷ்ணவி ராஜசேகருக்கு இன்ஸ்டாகிராமில் அவரைப் பின் தொடர்வோர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.