விஜய் டிவியில் 2021 ஆம் ஆண்டு காற்றுக்கென்ன வேலி சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. காற்றுக்கென்ன வேலி சீரியலில் தனது கனவுக்காக போராடும் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா குமார் நடித்து வருகிறார். சீரியலில் மிகவும் ஹோம்லியாக நடிக்கும் பிரியங்கா நிஜத்தில் மிகவும் மாடலாக உடை அணியக்கூடியவர். அவரை பற்றிய சில தகவல்கள் இதோ.. பிரியங்கா குமார் கர்நாடகாவில் இருக்கும் மைசூரில் பிறந்து வளர்ந்துள்ளார். பிரியங்கா தனது பள்ளி படிப்பையும் மைசூரில் முடித்துள்ளார். மாடலிங் துறை மீது ஆசைக்கொண்ட பிரியங்கா தொடர்ந்து மாடலிங் செய்து வந்துள்ளார். பின்பு கன்னட சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார். சாக்லெட் என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். 2022 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘Bad Manners' என்ற படத்திலும் பிரியங்கா நடித்துள்ளார். பிரியங்கா இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். கருப்பு நிற ஷார்ட் ட்ரெஸ் அணிந்து கேஷ்வலாக போஸ் கொடுக்கும் பிரியங்காவின் புகைப்படம்.