தமிழில் முன்னணி தொலைக்காட்சி நட்சத்திரங்களில் ஒருவரான டிடி என்ற திவ்யதர்ஷினி, சமீப காலமாக பயணத்தில் பிஸியாக உள்ளார். அழகான இடங்கள், எச்சில் ஊற வைக்கும் உணவுகள் என தனது பயணத்தை என்ஜாய் செய்து வருகிறார் டிடி. அப்போது எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார். அதோடு பாரீஸ் சுற்றுப் பயணத்தின் போது ஒரு ரெஸ்டாரண்டில் டேஸ்ட்டான பீட்சாவை சுவைத்தார். சீஸ் உணவுகளை விரும்பும் டிடி, பீட்சாவை செய்த சமையல்காரரை திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இது சீரியஸாக சொல்லப்படவில்லை. வேடிக்கையான முறையில் அப்படி கூறியிருந்தார் டிடி. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, தனது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் டிடி. பின்னர் 2017-ம் ஆண்டு அவரிடமிருந்து முறையான விவாகரத்து பெற்றார். ஆனால் வலிகளை வெளிக்காட்டாமல், எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் டிடி-க்கு ரசிகர்கள் தங்கள் அன்பை பொழிந்து வருகின்றனர்.